Friday, December 27, 2013

முதியோர் இருக்கை ...!!!

அலைந்து  ஓய்ந்து  அமர்ந்த 
ஆண்களை  எழுப்பும்  தாய்மாரே ...!!!
முதியோர்  இருக்கையில்  அமர்ந்தே
வாடைக் காற்று  சுவாசித்து 
வயோதிகர்  நிற்கப்   பார்க்க
உறுத்தாதோ  உங்கள்  உள்ளம் ...!!!


நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...

அறுதலி ...!!!

எழுத்து மனிதனை சீராக்கும் ...!!!

அப்பா ...!!!

விவாகம் ...!!!

Friday, December 20, 2013

சூட்சமம் அறியேன் ...



சூது அறியும்
சூட்சமம் கொஞ்சம்
உணர வை இறைவா...!!!

வஞ்சகம் கொண்ட
நெஞ்சத்தை என்னிடம்
விலக்கி வை இறைவா ...!!!

விஷ வார்த்தைகள்
கக்கும் பிராணிகள்
அறவே அகற்றி வை இறைவா ...!!!
 

நயமாய் பேசி
போலியாய் நடிக்கும் நரிகள் 
அண்டாதிருக்க வை இறைவா ...!!!
 

சுயநலம் கொண்டே சுற்றம் கெடுக்கும்
உறவுகள் ஒருபோதும்
ஒட்டாதிருக்க வை இறைவா ...!!!
 

வஞ்சகர்கள் கூடி
எனை இம்சித்தாலும்
எவற்றையும் வெல்லும்
இரும்பு இதயம்
எனக்காய் வேண்டும் இறைவா ...!!!
 

எவரிடம் என் தோழமையாயினும்
சன்றோனை சீண்டாத
சிந்தனை போதும் இறைவா ...!!!

நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...

Sunday, December 15, 2013

கவிதையானவள் . . .


ஆ த் ம ம் . . . .


கணினி காலம்தான் ஆயினும்
காதல் இன்னும் வலிக்கிறது ... !!!

மரத்துப்போன மனிதனில்
அவ்வப்போது மனிதநேயம்  விழிக்கிறது ... !!!

ஆங்கிலம் பேசும் நாவுக்கு
அடிபட்டதும் அம்மா என
அழைக்க மறவாமல் நடிக்கிறது ... !!!

போதையில் புத்தி மழுகும் 
ஆண்களுக்கு மத்தியில் நேசம் கொள்ளும்
ஆளுமையும் வாழ்கிறது  ... !!!

ரோட்டில் பசித்திருக்கும் உயிர் கண்டு
தான் மட்டும் புசிக்கும் நிலை - சில
நாட்களேனும் மனம் வெறுக்கிறது  ... !!!

காசுக்காக ஓடும் கால்கள்
எவனோருவனின் மரண ஊர்வலத்தில்
ஒருசில நொடிகளேனும் நிற்கிறது

இரும்பாய் போன மனிதனுக்கு
இன்னமும் இதயம் இயங்குகிறது ... !!!

ஆண்டு ஆயிரங்கள்  கடந்த பின்னும்
மனிதத்தில் ஆத்மம் 
அலைந்து கொண்டேதானிருக்கிறது  ... !!!

நானும் என் எழுத்தாணியும் 
சுப சத்யா ... !!!

Saturday, November 30, 2013

நாகரிக அடிமைகள் ...




நாகரிக அடிமைகள் நாங்கள்
ஆம்
கல்விக்கண்கள் கொண்ட
குருடர்கள் நாங்கள் ... !!!

சிந்திக்க இயலாத 
இயந்திரம் நாங்கள்
ஆம்
என்ன சொன்னாலும் தலையாட்டும்
ஆட்டுமந்தைகள் நாங்கள் ... !!!

உலகம் இயங்கும் வித்தைகள்
அறிந்தவர் நாங்கள்
ஆம்
எம் பரம்பரைத் தொழில் மறந்த
கற்றோர்கள் நாங்கள் ... !!!

தாய் மொழியில் சத்தமாய்ப் பேசாத
நாகரிகவாதிகள் நாங்கள்
ஆம்
அடிமைப்படுத்தியவனின் மொழியில்
அசிங்கமான வார்த்தைகள்
எங்கள் கௌரவத்தின் அடையாளம் ... !!!

பதினேழு வருட கல்விச்சிறையில்
முதலாளிகளின் பந்தயக்குதிரைகள் நாங்கள்
ஆம்
மூச்சிரைக்க ஓடத் தெரிந்தவனுக்கு
முன்னால் இருக்கும் கருக்கைகள்... !!!

சித்தமருத்துவம் அழித்த
சிறந்த மருத்துவர்கள் நாங்கள்
ஆக்கமிழந்த அறிவியல் அறிந்த
விஞ்ஞானி நாங்கள் ... !!!

குடிசை வீட்டை சீரமைக்கத் தெரியாத
கட்டிடப் பொறியாளர் நாங்கள்
மூன்றுவேளை  சோற்றுக்கு
முதுகலைப் பட்டதாரி நாங்கள் ... !!!

இயல்பை விளக்க தெரியாத
இலக்கியவாதி நாங்கள்
கண்கட்டி வித்தைக்காட்டும்
கலைஞர்கள் நாங்கள் ... !!!

முதலாளி வர்க்கத்திற்கு
மணி அடிக்கும் அர்ச்சகர் நாங்கள்
ஆம்
கோவணக் கொத்தடிமைகளின்
நாகரிக நகல் நாங்கள் ... !!!

வணிகம் புதைத்து
மானுடம் மறந்து
மந்தமாய் வாழும்
மேல் நாட்டு முதலையின்
மூளையை விற்க
பயிற்சிபெற்ற அதிமேதாவி நாங்கள் ... !!!

நானும் என் எழுத்தாணியும் 
சுப சத்யா ...