கணினி காலம்தான் ஆயினும்
காதல் இன்னும் வலிக்கிறது ... !!!
மரத்துப்போன மனிதனில்
அவ்வப்போது மனிதநேயம் விழிக்கிறது ... !!!
ஆங்கிலம் பேசும் நாவுக்கு
அடிபட்டதும் அம்மா என
அழைக்க மறவாமல் நடிக்கிறது ... !!!
போதையில் புத்தி மழுகும்
ஆண்களுக்கு மத்தியில் நேசம் கொள்ளும்
ஆளுமையும் வாழ்கிறது ... !!!
ரோட்டில் பசித்திருக்கும் உயிர் கண்டு
தான் மட்டும் புசிக்கும் நிலை - சில
நாட்களேனும் மனம் வெறுக்கிறது ... !!!
காசுக்காக ஓடும் கால்கள்
எவனோருவனின் மரண ஊர்வலத்தில்
ஒருசில நொடிகளேனும் நிற்கிறது
இரும்பாய் போன மனிதனுக்கு
இன்னமும் இதயம் இயங்குகிறது ... !!!
ஆண்டு ஆயிரங்கள் கடந்த பின்னும்
மனிதத்தில் ஆத்மம்
அலைந்து கொண்டேதானிருக்கிறது ... !!!
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ... !!!

No comments :
Post a Comment