வேகமாய் சுழலும் பூமியில்
ஒருவன் வேதனை அறிய எவனுமில்லை …
காசுக்காக ஓடும் கால்களுக்கிடையில்
கண்ணுயர நேரமில்லை …
நட்சத்திர விடுதியின் உணவுக்கிடையில்
அன்னையின் சமையல் ருசிக்கவில்லை …
நாகரிகவாதிகள் என்றுரைப்போம்
நட்சத்திர விடுதியில் நாய்களுக்கும்
எங்களுக்கும் தூரமில்லை …
நெற்களஞ்சியம் தஞ்சை என்றோம்
நஞ்சை புஞ்சை யெல்லாம் காணவில்லை …
தமிழகத்தில் அயலவர் அலுவலகம்
தமிழ் பேசும் தமிழனுக்கு வேலையில்லை …
எம் தேசத்தில் இல்லாமை என்றுமில்லை
ஊரெங்கும் உரக்க முழக்கமிட்டோம் …
முப்பொழுதும் ஓடி
ஊரெங்கும் உரக்க முழக்கமிட்டோம் …
முப்பொழுதும் ஓடி
மூன்று வேலை
உணவோடு
ஒரு
குண்டுமணி தங்கமும்
எங்கள் சேமிப்பில்
இல்லை …!!!
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...
சுப சத்யா ...
No comments :
Post a Comment