என்ன செய்வேன் நான் ...
உறங்காத விழிகள்
உணர்வற்ற தசைகள்
உண்ணமறுத்த இதழ்கள்
சுவாசமிழந்த நாசிகள்
கேளாத செவிகளென
ஐம்புலன்களும்
உன்னை மறக்கச் சொல்லி
அரப் போராட்டம் செய்ய
எந்தன் மானம்கெட்ட மனசோ
மண்டியிட்டு வேண்டுகிறது
மறுபடியும் உன்னை
காதலிக்க ...
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா
No comments :
Post a Comment