Saturday, October 12, 2013

காகிதக் கணைகள் ...



பாரீர் ... !!!!
அறச் சான்றோரே
பாரதத் தாயின்
ஓர வஞ்சனைதனை ... !!!!
 
ஒரு வேலை உணவுக்கே
ஊரார் முன் கையேந்த
கல்விச் சாலையில் நாங்கள் 
எப்படி கரை சேருவோம் ....!!!!





பழைய சோறே
பாதி வயிற்றுக்குப்
போதாதெனும் போது
பள்ளியில் நாங்கள்
எப்படி போதனை ஏற்போம் ....!!!!
 

நடை பாதையில்
நாயைப் போல்
சுருண்டு கிடக்கும் நாங்கள்
நாளைய இந்தியாவை
எங்கனம் வல்லரசாக்குவோம் ....!!!!


என்றுமே மலராத
புன்னகையோடு மௌனமாய்
காகிதங்களை பொருக்கிக்
கொண்டிருக்கிறோம் ....!!!!

 
படித்துப் படித்து
பாலாய்போன இளைஞனோ
ஏதோ காகிதங்களை சுமந்தபடி
கண்ணாடி மாளிகைக்குள்
சென்று வந்தான் ...!!!!

 
இக்காகிதம்
என்ன விலை என்றோம்
காலனாவுக்கும்

தேராது என்றான் ....!!!!
 
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா

No comments :

Post a Comment