நெற்றி குங்குமம் கரையவுமில்லை
கார் கூந்தல் கலையவுமில்லை
கள்வனின் கை விரல் தொடவுமில்லை
ஆடவன் நிழலும் அருகிலில்லை . . .
கார் கூந்தல் கலையவுமில்லை
கள்வனின் கை விரல் தொடவுமில்லை
ஆடவன் நிழலும் அருகிலில்லை . . .
மயங்கி எங்கும்
விழவுமில்லை
சாம்பல் திருடி ருசித்ததுமில்லை
சாம்பல் திருடி ருசித்ததுமில்லை
புளிப்பு மாங்காய்
தின்றதுமில்லை
பத்தியம் ஏதும் இருக்கவுமில்லை . . .
பத்தியம் ஏதும் இருக்கவுமில்லை . . .
பத்து மாதம் சுமக்கவுமில்லை
சீமந்தம் கூட நடந்திடவில்லை
அழுதுகொண்டு பிறக்கவுமில்லை
என் முகம் கண்டு சிரிக்கவுமில்லை . . .
அழகாய் ஐம்பதும்
ஆக்ரோஷமாய் ஐம்பதும்
ஆகமொத்தம் நூறு பிள்ளைகள்
ஆக்ரோஷமாய் ஐம்பதும்
ஆகமொத்தம் நூறு பிள்ளைகள்
மகாபாரத காந்தாரியும் நானில்லை . . .
எழுதி முடிக்கும் கவிதை
யாவும் என் சேயாக
ஈன்ற நொடி உவகை
கொள்ளும் தாயாகிறேன் . . .
யாவும் என் சேயாக
ஈன்ற நொடி உவகை
கொள்ளும் தாயாகிறேன் . . .
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா . . .

No comments :
Post a Comment