Sunday, October 13, 2013

என் வீரத் தமிழச்சியே ...

 
அன்னையின் தேசத்திலே
அந்நியனை அகற்றிடவே
கூடி படை திரட்டி
கொடுங்கோலனை கொன்றிடவே
வீரமங்கை வேலுநாச்சியார்
தோன்றிய மண்ணிதுவே ...
பாரத தேசத்தின் விடுதலைக்காய் 
முதல் முறை போரிட்டு
வென்ற பெண்ணிவளே ...

 
மங்களத்தின் குலமகளோ
இவள் என்றும்
மங்கிடாத மான்மயிலோ
குயிலி என்றொரு
பெயர்க் கொண்டாள்
வெள்ளையனை வேரறுக்க
வேங்கையாய் உருவெடுத்தே 
தனி ஒரு மங்கையாய்
மனித வெடிகுண்டாய்
மக்களுக்காய் மடிந்தால் இவளே ...

 
வீர மங்கைகளில்
வெள்ளையம்மாள் என்றொருத்தி
துணைவனின் உயிர்
பறித்த ஆங்கிலனை ...
ஆண் வேடம் தரித்து
அயலவன் இருப்பிடம் புகுந்து
கூர்முனை வாள்கொண்டு
காலனாய் கருவருவருத்த
கன்னிகை இவளே ...

 
கற்புடைமை கன்னியராம்
கார்கூந்தல் கண்ணகியாம்
ஆராய்ந்து அறியாது
அவசரமாய் தீர்ப்பெழுதி
நீதி தவறிய பாண்டியனை ...
நேர்கொண்டு வாதிட்டு
இல்லாளின் கோபம்
எந்நகரையும் அழித்திடும்
என்றுணர்த்தியவளும் இவளே ...

 
போர்களத்தில் மகன்
புறமுதிகிட்டு மடிந்தால்
ஆடவனுக்கு பாலூட்டிய
மார்பை அறுத்தெறிவேனென்ற
வீர தமிழச்சிகள் உருவெடுத்த
வேங்கைதமிழ் நாடிதுவே ...

 
முறத்தால் புலி விரட்டிய
மூதாதையர் பெற்றெடுத்த
கூர்விழி ஏந்திழையர்
எத்தனை எத்தனையோ...

 
ஆடையில் மட்டும்
சுதந்திரம் தேடும்
நாகரிக தமிழச்சியே

கேளடி ...
 
ஆயிரங்களில் மட்டுமே
உன் அழகைத்

தீர்மானிக்க  ஆர்ப்பரிக்கும்
அழகு நிலையங்கள்
விற்பனை வேஷமடி ...


அச்சம் மடம் நாணமென
அடுப்படி முதல்
அலுவலகம் வரை
அடக்கி வைக்கும் சமூகம்
ஆணாதிக்க வன்முறையடி ...

கூலிக்காக பெண்களை
கேலி செய்யும் சினிமாக்கள்
குடிச்ச பாலிலும்
காமம் கலந்துருக்குதடி ...


பல்லிக்கும் பூச்சிக்கும் 
பயம் கொண்டே
வார்த்தைகளில் வஞ்சகம் நிரப்பி 
வீதியில் குறைக்கும்

 நாயைக்கண்டும் வீணாய் 
அஞ்சி சாகிராயடி  ...


சூரியன் இல்லாது
சுழலாது இப்பூமி
உன் வீரம் தரிக்காது
எஞ்சிப் பிழைக்காதடி
மிஞ்சிய எம் தமிழ்சமூகம் ...


 நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா

 

No comments :

Post a Comment