Saturday, October 19, 2013
Friday, October 18, 2013
எம் மழலைகள் . . .
நெற்றி குங்குமம் கரையவுமில்லை
கார் கூந்தல் கலையவுமில்லை
கள்வனின் கை விரல் தொடவுமில்லை
ஆடவன் நிழலும் அருகிலில்லை . . .
கார் கூந்தல் கலையவுமில்லை
கள்வனின் கை விரல் தொடவுமில்லை
ஆடவன் நிழலும் அருகிலில்லை . . .
மயங்கி எங்கும்
விழவுமில்லை
சாம்பல் திருடி ருசித்ததுமில்லை
சாம்பல் திருடி ருசித்ததுமில்லை
புளிப்பு மாங்காய்
தின்றதுமில்லை
பத்தியம் ஏதும் இருக்கவுமில்லை . . .
பத்தியம் ஏதும் இருக்கவுமில்லை . . .
பத்து மாதம் சுமக்கவுமில்லை
சீமந்தம் கூட நடந்திடவில்லை
அழுதுகொண்டு பிறக்கவுமில்லை
என் முகம் கண்டு சிரிக்கவுமில்லை . . .
அழகாய் ஐம்பதும்
ஆக்ரோஷமாய் ஐம்பதும்
ஆகமொத்தம் நூறு பிள்ளைகள்
ஆக்ரோஷமாய் ஐம்பதும்
ஆகமொத்தம் நூறு பிள்ளைகள்
மகாபாரத காந்தாரியும் நானில்லை . . .
எழுதி முடிக்கும் கவிதை
யாவும் என் சேயாக
ஈன்ற நொடி உவகை
கொள்ளும் தாயாகிறேன் . . .
யாவும் என் சேயாக
ஈன்ற நொடி உவகை
கொள்ளும் தாயாகிறேன் . . .
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா . . .
Wednesday, October 16, 2013
Sunday, October 13, 2013
என் வீரத் தமிழச்சியே ...
அன்னையின் தேசத்திலே
அந்நியனை அகற்றிடவே
கூடி படை திரட்டி
கொடுங்கோலனை கொன்றிடவே
வீரமங்கை வேலுநாச்சியார்
தோன்றிய மண்ணிதுவே ...
பாரத தேசத்தின் விடுதலைக்காய்
முதல் முறை போரிட்டு
வென்ற பெண்ணிவளே ...
மங்களத்தின் குலமகளோ
இவள் என்றும்
மங்கிடாத மான்மயிலோ
குயிலி என்றொரு
பெயர்க் கொண்டாள்
வெள்ளையனை வேரறுக்க
வேங்கையாய் உருவெடுத்தே
தனி ஒரு மங்கையாய்
மனித வெடிகுண்டாய்
மக்களுக்காய் மடிந்தால் இவளே ...
வீர மங்கைகளில்
வெள்ளையம்மாள் என்றொருத்தி
துணைவனின் உயிர்
பறித்த ஆங்கிலனை ...
ஆண் வேடம் தரித்து
அயலவன் இருப்பிடம் புகுந்து
கூர்முனை வாள்கொண்டு
காலனாய் கருவருவருத்த
கன்னிகை இவளே ...
கற்புடைமை கன்னியராம்
கார்கூந்தல் கண்ணகியாம்
ஆராய்ந்து அறியாது
அவசரமாய் தீர்ப்பெழுதி
நீதி தவறிய பாண்டியனை ...
நேர்கொண்டு வாதிட்டு
இல்லாளின் கோபம்
எந்நகரையும் அழித்திடும்
என்றுணர்த்தியவளும் இவளே ...
போர்களத்தில் மகன்
புறமுதிகிட்டு மடிந்தால்
ஆடவனுக்கு பாலூட்டிய
மார்பை அறுத்தெறிவேனென்ற
வீர தமிழச்சிகள் உருவெடுத்த
வேங்கைதமிழ் நாடிதுவே ...
முறத்தால் புலி விரட்டிய
மூதாதையர் பெற்றெடுத்த
கூர்விழி ஏந்திழையர்
எத்தனை எத்தனையோ...
ஆடையில் மட்டும்
சுதந்திரம் தேடும்
நாகரிக தமிழச்சியே
கேளடி ...
ஆயிரங்களில் மட்டுமே
உன் அழகைத்
தீர்மானிக்க ஆர்ப்பரிக்கும்
அழகு நிலையங்கள்
விற்பனை வேஷமடி ...
அச்சம் மடம் நாணமென
அடுப்படி முதல்
அலுவலகம் வரை
அடக்கி வைக்கும் சமூகம்
ஆணாதிக்க வன்முறையடி ...
கூலிக்காக பெண்களை
கேலி செய்யும் சினிமாக்கள்
குடிச்ச பாலிலும்
காமம் கலந்துருக்குதடி ...
பல்லிக்கும் பூச்சிக்கும்
பயம் கொண்டே
வார்த்தைகளில் வஞ்சகம் நிரப்பி
வீதியில் குறைக்கும்
நாயைக்கண்டும் வீணாய்
அஞ்சி சாகிராயடி ...
சூரியன் இல்லாது
சுழலாது இப்பூமி
உன் வீரம் தரிக்காது
எஞ்சிப் பிழைக்காதடி
மிஞ்சிய எம் தமிழ்சமூகம் ...
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா
Saturday, October 12, 2013
காகிதக் கணைகள் ...
பாரீர் ... !!!!
அறச் சான்றோரே
பாரதத் தாயின்
ஓர வஞ்சனைதனை ... !!!!
ஒரு வேலை உணவுக்கே
ஊரார் முன் கையேந்த
கல்விச் சாலையில் நாங்கள்
எப்படி கரை சேருவோம் ....!!!!
அறச் சான்றோரே
பாரதத் தாயின்
ஓர வஞ்சனைதனை ... !!!!
ஒரு வேலை உணவுக்கே
ஊரார் முன் கையேந்த
கல்விச் சாலையில் நாங்கள்
எப்படி கரை சேருவோம் ....!!!!
பாதி வயிற்றுக்குப்
போதாதெனும் போது
பள்ளியில் நாங்கள்
எப்படி போதனை ஏற்போம் ....!!!!
நடை பாதையில்
நாயைப் போல்
சுருண்டு கிடக்கும் நாங்கள்
நாளைய இந்தியாவை
எங்கனம் வல்லரசாக்குவோம் ....!!!!
என்றுமே மலராத
புன்னகையோடு மௌனமாய்
காகிதங்களை பொருக்கிக்
கொண்டிருக்கிறோம் ....!!!!
படித்துப் படித்து
பாலாய்போன இளைஞனோ
ஏதோ காகிதங்களை சுமந்தபடி
கண்ணாடி மாளிகைக்குள்
சென்று வந்தான் ...!!!!
இக்காகிதம்
என்ன விலை என்றோம்
காலனாவுக்கும்
தேராது என்றான் ....!!!!
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா
Saturday, October 5, 2013
எனக்கேன் கோபம் ... ???
சாலையில் துடிக்கும்
உயிரைக் கண்டும்
வேகமாய் விரைந்திடும்
மனிதனைக் கண்டால்
எனக்கேன் கோபம் ... ???
கூடி வாழ்ந்த
குடும்பங்களுக்கு மத்தியில்
விவாகரத்துக்காய் ஓடும்
தம்பதிகள் கண்டால்
எனக்கேன் கோபம் ... ???
உயிரைக் கண்டும்
வேகமாய் விரைந்திடும்
மனிதனைக் கண்டால்
எனக்கேன் கோபம் ... ???
கூடி வாழ்ந்த
குடும்பங்களுக்கு மத்தியில்
விவாகரத்துக்காய் ஓடும்
தம்பதிகள் கண்டால்
எனக்கேன் கோபம் ... ???
அனுபவ மொழிகள் அனைத்தும்
அறவே அகன்றிட
பழமைகள் விவரிக்கும்
முதியோரை துரத்திச்
செல்ல பிராணிகள் வளர்க்கும்
குடும்பங்கள் கண்டால்
எனக்கேன் கோபம் ... ???
அறவே அகன்றிட
பழமைகள் விவரிக்கும்
முதியோரை துரத்திச்
செல்ல பிராணிகள் வளர்க்கும்
குடும்பங்கள் கண்டால்
எனக்கேன் கோபம் ... ???
புலுப்போல் நொந்து
தானியம் படைத்திட்டே
அதை பயனற்று
பதுக்கி ஒலித்திட்டால்
எனக்கேன் கோபம் ... ???
விவசாய நிலமெல்லாம்
தரிசாய் வறண்டிட
மழை நீர் வீணாய்
கடலில் கலக்க
நிமிரச்செய்வோம் என
நிவாரணம் வழங்கிட்டால்
எனக்கேன் கோபம் ... ???
காலனாவுக்கும் கையேந்தும்
பாரத நாட்டினிலே
கோடி கோடியாய் கொள்ளையடித்திட்டால்
எனக்கேன் கோபம் ... ???
கூண் விழுந்த கிழவியும்
கூடையில் பழம்
விற்றுப் பிழைக்க
தன்னலம் மறந்து
சுய நினைவிழந்து
மதுவில் மயங்கிடும்
இளைஞர்கள் கண்டால்
எனக்கேன் கோபம் ... ???
காதலெல்லாம் கசப்பு மருந்தாக
கௌரவ கொலைகள்
அழகாய் அரங்கேற
நேசத்தை கொன்றிடும்
சாதியை கண்டால்
எனக்கேன் கோபம் ... ???
இந்து கிறிஸ்தவன்
கூடையில் பழம்
விற்றுப் பிழைக்க
தன்னலம் மறந்து
சுய நினைவிழந்து
மதுவில் மயங்கிடும்
இளைஞர்கள் கண்டால்
எனக்கேன் கோபம் ... ???
காதலெல்லாம் கசப்பு மருந்தாக
கௌரவ கொலைகள்
அழகாய் அரங்கேற
நேசத்தை கொன்றிடும்
சாதியை கண்டால்
எனக்கேன் கோபம் ... ???
இந்து கிறிஸ்தவன்
இசுலாமியனென
நாங்கள் நண்பர்களாய் வசிக்க
மதம் வாழ
நாங்கள் நண்பர்களாய் வசிக்க
மதம் வாழ
மனிதனைக் கொல்லும்
மிருகங்கள் கண்டால்
எனக்கேன் கோபம் ... ???
பெண் தெய்வங்கள்
பேறுகொண்ட நாட்டினிலே
கன்னிகைகள்
கற்ப்பழிக்கப்பட்டாள்
எனக்கேன் கோபம் ... ???
காக்கை குருவியும்
சுதந்திரமாய்ச் சுற்றி திரியும்
இலங்கையிலே என்
இனத் தமிழன் மட்டும்
இழிவாய் இறந்திட்டால்
எனக்கேன் கோபம் ... ???
எல்லை பகுதி
இதுவென சொல்லி
ஏமாந்தவன் இவன் இந்தியனென
எத்தனை வீரர்கள் இறந்தாலும்
ஊமையாய் உட்கார்ந்திருந்தால்
எனக்கேன் கோபம் ... ???
மிருகங்கள் கண்டால்
எனக்கேன் கோபம் ... ???
பெண் தெய்வங்கள்
பேறுகொண்ட நாட்டினிலே
கன்னிகைகள்
கற்ப்பழிக்கப்பட்டாள்
எனக்கேன் கோபம் ... ???
காக்கை குருவியும்
சுதந்திரமாய்ச் சுற்றி திரியும்
இலங்கையிலே என்
இனத் தமிழன் மட்டும்
இழிவாய் இறந்திட்டால்
எனக்கேன் கோபம் ... ???
எல்லை பகுதி
இதுவென சொல்லி
ஏமாந்தவன் இவன் இந்தியனென
எத்தனை வீரர்கள் இறந்தாலும்
ஊமையாய் உட்கார்ந்திருந்தால்
எனக்கேன் கோபம் ... ???
கண்முன்னே கயவர்களின்
கலியாட்டம் மேடை ஏறினாலும்
சொரனையற்று மந்தமாய் நகரும்
மனிதனை கண்டால்
எனக்கேன் கோபம் ... ???
ஆம் எனக்கேன் கோபம்
எங்கோ அழுபவன்
என் இணையவன் இல்லையே
எனக்கேன் கோபம் ... ???
பக்கத்துக்கு வீட்டில்
துப்பியவன்
நம் வீட்டில் துப்பாதவரை
நமக்கேன் கோபம் ... ???
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...
Subscribe to:
Comments
(
Atom
)





