Sunday, November 3, 2013

நன்றியில்லா கடன்காரன் ...

பேனாவுக்கும் பேப்பருக்கும் 
உறவில்லாமல் போனதால் 
கண்ணீரால் கவிதை வடிக்கிறேன் 
கண்ணே கலங்காமல் கேள் ... !!!!

மகன் ஒருவன் வேண்டுமென 
மண் சோறு தின்றால் ஒருத்தி ... 
இவள் மடியில் அவன் தரித்ததனால் 
மறுபிறவி பெற்றான் ஒருவன் ... 
இவன் மண்ணில் பிறந்ததனால்  
மகிழ்ச்சியில் திளைத்தார்கள் இவர்கள் ... !!!!

பட்டுப்போன இவர்களது வாழ்கையில் 
பசுமையான மலர்செடியாய்  
வளர்ந்தான் இவன்  ... !!!!

நிமிர்ந்து இவன் நடக்க 
நிம்மதியாய் இவன் இருக்க 
பொறுப்பாய் இவன் படிக்க 
பூவாய் இவன் மலர 
பொக்கிஷமாய் காத்தார்கள் இவர்கள்   ... !!!!

பழைய சாதத்தில்
பாதி வாழ்கை கழிந்தாலும் 
அவனிடம் எதிர்பார்த்ததென்னவோ 
வெறும் பாசம் மட்டும்தான்  ... !!!!

ஓடிய நாட்களையும் 
சிந்திய வேர்வையையும் 
காட்டிய அன்பையும் 
கருணை வள்ளல்கள் 
கணக்கெடுக்காமல் விட்டு விட்டார்கள்  ... !!!!

நன்றியில்லா கடன்காரன் 
தெரு நாயாய் துரத்திட்டான்   ... !!!!

நானும் என் எழுத்தாணியும் 
சுப சத்யா 

No comments :

Post a Comment