Saturday, November 30, 2013

நாகரிக அடிமைகள் ...




நாகரிக அடிமைகள் நாங்கள்
ஆம்
கல்விக்கண்கள் கொண்ட
குருடர்கள் நாங்கள் ... !!!

சிந்திக்க இயலாத 
இயந்திரம் நாங்கள்
ஆம்
என்ன சொன்னாலும் தலையாட்டும்
ஆட்டுமந்தைகள் நாங்கள் ... !!!

உலகம் இயங்கும் வித்தைகள்
அறிந்தவர் நாங்கள்
ஆம்
எம் பரம்பரைத் தொழில் மறந்த
கற்றோர்கள் நாங்கள் ... !!!

தாய் மொழியில் சத்தமாய்ப் பேசாத
நாகரிகவாதிகள் நாங்கள்
ஆம்
அடிமைப்படுத்தியவனின் மொழியில்
அசிங்கமான வார்த்தைகள்
எங்கள் கௌரவத்தின் அடையாளம் ... !!!

பதினேழு வருட கல்விச்சிறையில்
முதலாளிகளின் பந்தயக்குதிரைகள் நாங்கள்
ஆம்
மூச்சிரைக்க ஓடத் தெரிந்தவனுக்கு
முன்னால் இருக்கும் கருக்கைகள்... !!!

சித்தமருத்துவம் அழித்த
சிறந்த மருத்துவர்கள் நாங்கள்
ஆக்கமிழந்த அறிவியல் அறிந்த
விஞ்ஞானி நாங்கள் ... !!!

குடிசை வீட்டை சீரமைக்கத் தெரியாத
கட்டிடப் பொறியாளர் நாங்கள்
மூன்றுவேளை  சோற்றுக்கு
முதுகலைப் பட்டதாரி நாங்கள் ... !!!

இயல்பை விளக்க தெரியாத
இலக்கியவாதி நாங்கள்
கண்கட்டி வித்தைக்காட்டும்
கலைஞர்கள் நாங்கள் ... !!!

முதலாளி வர்க்கத்திற்கு
மணி அடிக்கும் அர்ச்சகர் நாங்கள்
ஆம்
கோவணக் கொத்தடிமைகளின்
நாகரிக நகல் நாங்கள் ... !!!

வணிகம் புதைத்து
மானுடம் மறந்து
மந்தமாய் வாழும்
மேல் நாட்டு முதலையின்
மூளையை விற்க
பயிற்சிபெற்ற அதிமேதாவி நாங்கள் ... !!!

நானும் என் எழுத்தாணியும் 
சுப சத்யா ...

Wednesday, November 6, 2013

பிணந்தின்னிகள் ....




பிரபாகரன் பாலச்சந்திரன் இசைப்ரியா
இன்னும் எத்தனை எத்தனை
உயிர்களடா இறைவா ...
இதயம் ரணமாய் கனத்தாலும்
வீரத்தை புதைத்த
தமிழனாய் போனோமடா .... !!!!

பச்சிளங்குழந்தை தாயின் மடி தேட
பள்ளி சிறுமிகள் நரிகளுக்கு உணவாக
ஈன பிறவிகளுக்கு என் தமிழினம் இறையாக
நெருஞ்சி முள்ளாய் நெஞ்சை கிழித்தாலும்
ஏதும் செய்யமுடியா
முடவனாய் ஆனொமடா .... !!!!


இறந்த பிணத்திலும்
காமம் தேடும் கழுகுகளே
எப்படி உரைக்க உங்களது பிறப்பை
காட்டுப்பன்றிகளுடன் புணர்ந்து
பெற்றாளோ உன் அன்னை .... !!!!

உன் தங்கை தாய்
பிள்ளை பெண்டாட்டியிடம்
இல்லாதது என்ன கண்டாயடா
இறந்த பிணங்களிடம் .... !!!!


கூர்முனை வாள் கொண்டு எங்கள்
குருதியை கொட்ட செய்திருந்தாலும்
இறக்கும் நேரத்திலும்
எடுத்துரைதிருப்போம்
நீங்கள் வீரர்களென .... !!!!

போர்க்களமா உங்களது
பிணந்தின்னிகள் வாழும்
கூடமடா அது ...
மானுடம் மறந்த
நரமாமிசம் தின்னும்
நாய்களடா நீங்கள் .... !!!!



சமர்ப்பணம் மாண்ட என் தமிழினத்திற்கு
சுப சத்யா .... !!!!

Sunday, November 3, 2013

நன்றியில்லா கடன்காரன் ...

பேனாவுக்கும் பேப்பருக்கும் 
உறவில்லாமல் போனதால் 
கண்ணீரால் கவிதை வடிக்கிறேன் 
கண்ணே கலங்காமல் கேள் ... !!!!

மகன் ஒருவன் வேண்டுமென 
மண் சோறு தின்றால் ஒருத்தி ... 
இவள் மடியில் அவன் தரித்ததனால் 
மறுபிறவி பெற்றான் ஒருவன் ... 
இவன் மண்ணில் பிறந்ததனால்  
மகிழ்ச்சியில் திளைத்தார்கள் இவர்கள் ... !!!!

பட்டுப்போன இவர்களது வாழ்கையில் 
பசுமையான மலர்செடியாய்  
வளர்ந்தான் இவன்  ... !!!!

நிமிர்ந்து இவன் நடக்க 
நிம்மதியாய் இவன் இருக்க 
பொறுப்பாய் இவன் படிக்க 
பூவாய் இவன் மலர 
பொக்கிஷமாய் காத்தார்கள் இவர்கள்   ... !!!!

பழைய சாதத்தில்
பாதி வாழ்கை கழிந்தாலும் 
அவனிடம் எதிர்பார்த்ததென்னவோ 
வெறும் பாசம் மட்டும்தான்  ... !!!!

ஓடிய நாட்களையும் 
சிந்திய வேர்வையையும் 
காட்டிய அன்பையும் 
கருணை வள்ளல்கள் 
கணக்கெடுக்காமல் விட்டு விட்டார்கள்  ... !!!!

நன்றியில்லா கடன்காரன் 
தெரு நாயாய் துரத்திட்டான்   ... !!!!

நானும் என் எழுத்தாணியும் 
சுப சத்யா 

உழவன் பிள்ளையின் உணவு ...


வானில் பூத்த நட்சத்திரங்களாய் 
வளம் பொங்கும் எம் மண்ணில் 
விளைந்த மாணிக்கங்கள் ...

வடக்கே வளமான 
வாழைத்தோப்பு ...
பத்தடியில் பார்வைக்கழகாய் 
கரும்புத் தோட்டம் ...

வானை தொடுமாறு வளர்ந்து நிற்கும் 
தென்னந் தோப்பு ...
காய்ச்சுப் போன கரங்களால்
பூத்த முல்லைப் பூக்கள் ... 

நாளெல்லாம் பாடுபட்டு 
நெல்மணி அது சேர 
மக்களின் பசி தீர 
பாடுபட்டவன் நான் ...

எப்பொழுதும் என் பிள்ளைமட்டும் 
ஒட்டிய வயிறோடு 
அரசு பள்ளியின் மதிய வேலை 
உணவுக்காய் தட்டேந்தியபடி ...

நானும் என் எழுத்தாணியும் 
சுப சத்யா ...