தாய்மொழி மறந்தாய்..
தன் மானத்தையும் இழந்தாய்..
தன் மானத்தையும் இழந்தாய்..
எப்படி இருந்தாய் தமிழா..
ஏன் இப்படி தடம்புரண்டாய்..
நெறியோடு வாழ்ந்தாய் தமிழா.. ஏனோ தறிகெட்டு போனாய்..
உழவு செய்தோம்..
நெசவு செய்தோம்..
குயவர் கொண்டோம்..
கட்டிடக்கலைகளை கற்றோம்..
செங்கல் சூலை அமைத்தோம்..
சித்த மருத்துவத்திலும் சிறந்தோம்..
கம்பு சோளம் கேழ்வரகு..
பருத்தி நெல் மல்லிகை..
காய்கறி பழங்கள் பட்டுசேலை..
முத்து பவளம் உலோகமென..
கப்பல் கொண்டு
அலை கிழித்து
சித்த மருத்துவத்திலும் சிறந்தோம்..
கம்பு சோளம் கேழ்வரகு..
பருத்தி நெல் மல்லிகை..
காய்கறி பழங்கள் பட்டுசேலை..
முத்து பவளம் உலோகமென..
கப்பல் கொண்டு
அலை கிழித்து
உலகம் வியக்க
வணிகம் செய்தோம்..
எத்தனை தொழில்கள் செய்தாய்
அத்தனையும் இழந்தாய் தமிழா
அத்தனையும் இழந்தாய் தமிழா
அடிமையாய் வாழத்தான்
ஆசையும் கொண்டாயோ . . . ???
ஆசையும் கொண்டாயோ . . . ???
அறிவியல் வென்றோம்..
ஆடல் கலைகைகள் பல கொண்டோம்..
அறுசுவை உணவு உண்டோம்..
ஊனில் பாதி தானமும் செய்தோம்..
அறுசுவை உணவு உண்டோம்..
ஊனில் பாதி தானமும் செய்தோம்..
தற்காப்பு கலைகள் கொண்டோம்..
எண்ணிலடங்கா இலக்கியங்கள் பெற்றோம்..
வீரவிளையாட்டுகள் பயின்றோம்..
பார்போற்றும் பண்பாடு கொண்டோம்..
எண்ணிலடங்கா இலக்கியங்கள் பெற்றோம்..
வீரவிளையாட்டுகள் பயின்றோம்..
பார்போற்றும் பண்பாடு கொண்டோம்..
செழுமை நாட்டினிலே,
மதுரை மா நகரினிலே,
எப்புறமும் முழங்க,
சங்கத்தமிழ் வளர்த்தோம்..
தாலாட்டு முதல் ஒப்பாரி வரை,
இசையால் தானே
இணைந்திருந்தோம் ..
வந்தாரை வாழ வைத்தோம்..
யாதும் ஊரே
யாவரும் கேளிர் என்றோம்...
எடுத்துரைக்க எத்தனை
பெருமைகள் உண்டு
என் தாய்திரு நாட்டிற்க்கு..
அருமைத் தமிழா..
அந்நிய மோகத்தில்
உன் முகவரி இழந்தாயோ . . .???
குருதியில் கலந்த இனத்தை
கருவிலே கலைக்க முற்படுகிறாய்,
தமிழ் மண்ணை உண்டு வளர்ந்தும்
மரத்துப்போன நடைபினமாய்த்தானே
வாழ்ந்து மடிகிறாய் !...
நாக்கை வெட்டிக்கொண்டு
நாளை பேசவும் துடிக்கிறாய் !...
நஞ்சுண்டு நாளை
வாழவும் நினைக்கிறாய் !...
பெற்ற பிள்ளையே
தாயை மிதிப்பதோ . . .???தமிழ் மண்ணை உண்டு வளர்ந்தும்
மரத்துப்போன நடைபினமாய்த்தானே
வாழ்ந்து மடிகிறாய் !...
நாக்கை வெட்டிக்கொண்டு
நாளை பேசவும் துடிக்கிறாய் !...
நஞ்சுண்டு நாளை
வாழவும் நினைக்கிறாய் !...
பெற்ற பிள்ளையே
தமிழனே
தமிழை மறப்பதோ . . .???
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா . . .
நன்றி : - விக்ராந்த் & தரணி

No comments :
Post a Comment