இறைவனை கண்டேன்...
கடவுள் எங்கே
என தேடி அலைந்தேன் ...
தேடி தேடி அலைந்ததிலே
தெளிவில்லா முடிவு பெற்றேன் ...
முடிவில்லா பொருளில் எல்லாம்
தொடக்கமே அவன்தான் என்றேன் ...
விடை இல்லா வினாவிர்க்கெல்லாம்
விதி விளக்கே அவன்தான் என்றேன் ...
இயற்கையின் அழகிலெல்லாம்
அவன்தான் இருக்கிறான் என்றேன் ...
இன்பம் துன்பம் இரண்டிலுமே
அவனைதான் நினைவில் கொண்டேன் ...
என்னென்னவோ சொல்லி சொல்லி
இறுதியில் என் மனம் இறுகக் கண்டேன்...
மரணத்தின் மடியில் சாய்வதற்குள்
மனம் உன்னை காண துடிக்கிறது என்றேன் ...
கண்ணிமைக்குள் தேங்கிய நீரோடு
இமை மூடிய தருணத்தில்
இறைவன் என் முன் தோன்றலானான் ...
மெலிதாய் இமை உயர்த்தி
விழி விளித்து நோக்கலானேன் ...
அவன் யான் வணங்கும்
இறைவன் இல்லை ...
மனிதநேயத்தால் மடியாது வாழும்
மனிதன் என்றுணர்ந்தேன் ...
ஓர் அறிவு கொண்ட புல் முதல்
ஆறறிவு கொண்ட மனிதன் வரை
அத்தனை உயிர்களிடமும்
அன்பு கொள்ளும் இதயமே
இறைவன் என்றுணர்ந்தேன் ...
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா
contact : http://www.facebook.com/sathya.rks sathya4u.smart@gmail.com